ஆடை படத்தின் வெற்றியை அடுத்து அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அதோ அந்த பறவை போல.அறிமுக இயக்குனர் வினோத்.கே.ஆர் இந்த படத்தை இயக்குகிறார்.செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

.

ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.ஆஷிஷ் வித்யார்த்தி,சமீர் கோச்சர்,சுப்ரீம் சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் தற்போது பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதே தேதியில் ஹிப்ஹாப் தமிழாவின் நான் சிரித்தால் மற்றும் அசோக் செல்வனின் ஓ மை கடவுளே வெளியாகவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

.