தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

.

.

பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.தபு,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்

.