தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள Ala Vaikunthapuramuloo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.தபு,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.



இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் பாடல்கள் யூடியூப்பில் மட்டும் 1 பில்லியன் பாரவையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thanks to each & every music lover for making our scintillating audio such a big success. #AVPLMusic

1 Billion music streams and counting on a single channel on @YouTubeIndia for #AlaVaikuntapurramuloo ❤️ @alluarjun #Trivikram @hegdepooja @MusicThaman #1BillionStreamsForAVPL pic.twitter.com/fLqmgWg1wU

— Geetha Arts (@GeethaArts) May 15, 2020