உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் என்ற அடையாளம் இருந்தாலும், தனது நடிப்பால் மக்களின் மனதில் இடம்பெற்றவர் அக்ஷரா ஹாசன். பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். முதல் படத்திலே அமிதாப் பச்சன், தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து அசத்தினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி தந்தார் அக்ஷரா.

கடந்த ஆண்டு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். ட்ரெண்ட் லவுட் Trend Loud நிறுவனம் தயாரிக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்து வருகிறார் நடிகை அக்‌ஷரா ஹாசன். இந்த படத்தை ராஜா ராமமூர்த்தி இயக்கி வருகிறார். அமெரிக்க மாப்பிள்ளை எனும் வெப்சீரிஸ் மூலம் திரை ரசிகர்களை ஈர்த்தவர் இவர். புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

டீனேஜ் பருவத்திற்கும், ஸ்மார்ட்டான பெண் பருவத்திற்கும் இடையே உள்ள கேரக்டரில், பெண்மையை போற்றும் விதமாக நடித்துள்ளார் அக்ஷரா. இதன் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 14-ம் தேதியன்று வெளியானது. அதைத்தொடர்ந்து படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. டீஸரை பார்க்கையில் பவித்ரா எனும் ரோலில் அக்ஷரா நடித்துள்ளார் என்று தெரிகிறது. சுஷா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கீர்த்தனா முரளி எடிட்டிங் செய்கிறார். அழகியகூத்தன் மற்றும் சுரேன் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர். படத்தில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஷாலினி விஜயகுமார், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்துள்ளனர்.

அக்ஷரா கைவசம் அக்னிச் சிறகுகள் படம் உள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். விஜி எனும் ரோலில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

இந்நிலையில் அக்ஷரா ஹாசன் குழந்தையாக இருக்கும் போது பாடிய பாடல் வீடியோவை அவரது தந்தையும், திரையுலகின் உலகநாயகனுமான நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது மட்டுமில்லாமல் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்து அக்ஷரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் இந்த வாய்ப்பை தந்த பாப்புஜி அவர்களுக்கு நன்றி என்று கமல் ஹாசனை டேக் செய்துள்ளார்.

What an honor it is to have been given an opportunity to sing our national song as a child. Thank you to my bapuji @ikamalhaasan for this. Happiest birthday to the father of our nation (Bapuji). May we still persevere to have equality, love and much of what Ghandhiji stood for. pic.twitter.com/yS0kv7uV0M

— Akshara Haasan (@Iaksharahaasan) October 2, 2020