உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் என்ற அடையாளம் இருந்தாலும், தனது நடிப்பால் மக்களின் மனதில் இடம்பெற்றவர் அக்ஷரா ஹாசன். பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். முதல் படத்திலே அமிதாப் பச்சன், தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து அசத்தினார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி தந்தார் அக்ஷரா. கடந்த ஆண்டு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார் அக்ஷரா.

ட்ரெண்ட் லவுட் Trend Loud நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ளார். அமெரிக்க மாப்பிள்ளை எனும் வெப்சீரிஸ் மூலம் திரை ரசிகர்களை ஈர்த்தவர் இவர். இந்த படத்தின் டைட்டில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பது தெரியவந்தது. புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார்.

டீனேஜ் பருவத்திற்கும், ஸ்மார்ட்டான பெண் பருவத்திற்கும் இடையே உள்ள கேரக்டரில், பெண்மையை போற்றும் விதமாக நடித்துள்ளார் அக்ஷரா. இதன் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று வெளியானது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த போஸ்டரை வெளியிட்டார். இந்த அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் போஸ்டர் இணையத்தை அசத்தி வருகிறது.

அக்ஷரா கைவசம் அக்னிச் சிறகுகள் படம் உள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். விஜி எனும் ரோலில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

Delighted to launch the first-look of #AchchamMadamNaanamPayirppu. Wishing @Trendloud the best on their next big venture.@kaiyavecha @Iaksharahaasan @amnp_thefilm @DoneChannel1#AMNP #TrendloudOriginalFilm #AksharaHaasan pic.twitter.com/L6JBIed8VO

— VijaySethupathi (@VijaySethuOffl) September 14, 2020