தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகிறது வலிமை.

தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க, நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, யோகி பாபு, குக்கு வித் கோமாளி புகழ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகும் வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். வெகு நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தல அஜித்தின் மாஸ் கெட்டப்புகளோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக வலிமை திரைப்படத்தில் மிரட்டலான லுக்கில் அஜித் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த ட்ரெண்டிங் புகைப்படங்களில் கீழே உள்ள லிங்கில் காணலாம்.

#ValimaiMotionPoster has crossed 10 million+ views on YouTube https://t.co/dpwc4dqFFC#Valimai Power is the state of Mind
#Ajithkumar @BoneyKapoor #HVinoth @BayViewProjOffl @SureshChandraa #NiravShah @thisisysr @humasqureshi pic.twitter.com/YZCguiE9DM

— Done Channel (@DoneChannel1) July 13, 2021