தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் திட்டம் இரண்டு. மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் துருவநட்சத்திரம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஐய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் தி கிரேட் இந்தியன் கிட்சன் மலையாள படத்தின் ரீமேக்காக தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படமான பூமிகா நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. குன கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பூமிகா திரைப்படத்தை இயக்குனர் ரதீந்தரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். ராபர்டோ ஸசாரா ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஹாரர் படமாக தயாராகி இருக்கும் பூமிகா திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பூமிகா படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விறுவிறுப்பானவீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A unique horror thriller ahead - #Boomika

Premiering on @vijaytelevision Aug 22, 3pm Sunday@Netflix_INSouth from Aug 23, 12am

pic.twitter.com/NC0wONpz9G

— Kaushik LM (@LMKMovieManiac) August 17, 2021