தனது விடாமுயற்சியாலும் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலமும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து அசத்தி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.

ஹீரோயினாக மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்துக்கு வெயிட்டான படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இவரது திட்டம் இரண்டு படம் சில நாட்களுக்கு முன் சோனி லைவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார்.இவர் நடிப்பில் அடுத்த்தாக துருவ நட்சத்திரம்,பூமிகா,டிரைவர் ஜமுனா,மோகன்தாஸ்,Tuck Jagadish மற்றும் சில படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா.இவரது 25ஆவது படமான பூமிகா குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் Stone Bench தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை ரத்தின்திரன் பிரசாத் இயக்கியுள்ளார்.ப்ரித்வி சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் நேரடியாக விஜய் டிவியில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Extremely happy to announce that #Boomika will have its Tamil Premiere on @vijaytelevision Cant wait 4 u all to watch my Eco thriller-horror directed by @RathindranR. @karthiksubbaraj @kaarthekeyens @Sudhans2017 @SureshChandraa @StonebenchFilms #PassionStudios#BoomikaonVijayTV pic.twitter.com/mm020Xnf0h

— aishwarya rajesh (@aishu_dil) July 31, 2021