கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தமிழில் ஆதித்ய வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகிறார்.

.

பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்த பனிதா சந்து இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் நடித்தார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்தார். ரதன் இசையமைத்திருந்தார்.

.

தற்போது இந்த படத்திலிருந்து கனா பாடல் வீடியோ வெளியானது. துருவ் மற்றும் பிரியா ஆனந்தின் கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக உள்ளது என்றே கூறலாம். க்ரித்திகா நெல்சன் பாடிய இந்த பாடல் வரிகளை தாமரை எழுதியுள்ளார்.

.