மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் தற்போது கிளாப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுனால் கிளாப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. பல படங்களின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தினசரி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உதவி இயக்குனர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஆதி, Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் உதவி இயக்குனர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கி உதவியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உதவி இயக்குனர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க முடிவு செய்து ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டது. அதன்படி, கோடம்பாக்கம், வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், நெசப்பாக்கம், வளசரவாக்கம், உட்பட சில பகுதிகளில் சிரமப்படும் உதவி இயக்குனர்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் சென்று ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளோம். எங்கள் கடமையை செய்துள்ளோம் என்று ஆதி கூறியுள்ளார். ஆதியின் இந்த உதவியை சினிமாத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.