தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கினார். தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியான தொடர்களில் கதாநாயகியாகவும் அதே தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வளர்ந்து வரும் ப்ரியா பவானி சங்கர்-ன் தாத்தா இன்று காலமானார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ப்ரியா பவானி சங்கர் தனது தாத்தா குறித்து அழகான ஒரு கடிதத்தையும் எழுதி பகிர்ந்துள்ளார் .
தனது தாத்தாவை குறித்து புகழ்ந்தும் தனக்கும் தன் தாத்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவை குறித்து மிகவும் சுவாரசியமாகவும் தான் குழந்தையாக இருந்ததில் இருந்து இப்போது வரை தாத்தாவிடம் செய்த சேட்டைகள் குறித்தும் அழகாக எழுதியுள்ள பிரியா பவானி சங்கர் தனது எங்களுக்கு என்று எந்த சொத்தும் எழுதிக் கொடுக்கவில்லை ஆனால் தன்னுடைய முதல் சம்பளத்தில் 1950இல் அன்றையக் இன்றைய காசு 24 ரூபாய்க்கு ப்ரியா பவானி சங்கர்-ன் தாத்தா தன் அம்மாவுக்கு வாங்கிய “தோடு” ஒன்றை “இனி நீ வெச்சிக்கோன்னு” அவர் கொடுத்ததை நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கான ஒரு பொக்கிஷமாக கருதுவதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக அந்தக் கடிதத்தில்,
“ அம்மாவோட தோடையும் உங்க பெண்ணையும் மாப்பிள்ளையையும் என் உயிரைவிட பத்திரமா பார்த்துப்பேன் தாத்தா சந்தோசமா போயிட்டு வாங்க”
என தன் தாத்தாவைப் பற்றி அழகாக எழுதியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். இதை பலரும் ட்விட்டரில் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா❤️😊 pic.twitter.com/vo0H18USyR
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 8, 2021