2014-ல் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனந்தி.அதே வருடத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து இவர் கயல் அனந்தி என்று ரசிகர்களால் அழைக்கப்பட தொடங்கப்பட்டார்.

தொடர்ந்து இவர் நடித்த சண்டிவீரன்,திரிஷா இல்லனா நயன்தாரா,விசாரணை,எனக்கு இன்னொரு பேர் இருக்கு,பண்டிகை,மன்னர் வகையறா,பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி,கதிர் ஹீரோவாக நடிக்கும் படம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு நேற்று திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.இதனை தொடர்ந்து சில புகைப்படங்கள் வெளியாகி இவருக்கு திருமணம் நடைபெற்றது உறுதியாகியுள்ளது.வாரங்கல்லில் பிரபல தொழிலதிபரும்,அக்னி சிறகுகள் படத்தின் இணை இயக்குனருமான சாக்ரடீஸ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.இவருக்கு ரசிகர்களும்,பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actress #Anandhi got married today. @JSKfilmcorp @NaveenFilmmaker along with the newly married couple. Hearty wishes @anandhiactress pic.twitter.com/SLp7ckMjrr

— Sathish Kumar M (@sathishmsk) January 7, 2021