தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிம்பு. தமிழில் வெளியான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து கோவில்,மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி அருண் விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியோடு இணைந்து நடித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வந்தது. நடிகர் சிலம்பரசனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அது போலவே நடிகர் சிலம்பரசனும் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த தன் ரசிகருக்காக கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டினார் சிலம்பரசன். தனது ரசிகர் மன்றத்தில் இருக்கும் தீவிர ரசிகர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவது சிலம்பரசனின் வழக்கம்.

அந்த வகையில் சிலம்பரசனின் ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக இருக்கும் குட்லக் சதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார். சிலம்பரசனுக்கு மிகவும் நெருக்கமான குட்லக் சதீஷின் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் மிகவும் உருக்கமான ஒரு கடிதத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குட்லக் சதீஷ் பற்றியும் அவரது மறைவு பற்றியும் மிகவும் நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

கிட்டத்தட்ட காதல் அழிவதில்லை படத்திலிருந்து குட்லக் சதீஷ் சிலம்பரசனுடன் மிகுந்த துணையாக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ள நடிகர் சிலம்பரசன். அவரது மறைவை எண்ணி மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார் என வேதனையோடு தெரிவித்துள்ளார்.மேலும் அந்த அறிக்கையில் அவரது ரசிகர்களும் பொதுமக்களும் குருநாதர் பற்றி மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் உங்களின் முழு ஆலோசனைப்படி தகுந்த பாதுகாப்போடு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் மிகுந்த விழிப்புணர்வோடு எழுதியுள்ளார்.

We regret to inform that our honourable general secretary Mr. @goodlucksathish passed away due to #COVID19 .. Deep Condolences to the family and the entire fraternity of @SilambarasanTR_ 💔😭

Official Condolences Note from Thalaivan #SilambarasanTR 💔 pic.twitter.com/aNZDCD1Ksr

— Deepu (@DEEPU_S_GIRI) May 15, 2021