கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் நிறைய சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பதை நம்மால் காணமுடிகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விவேக் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் சமீபத்திய இறப்புச் செய்தியே இன்னும் நம்மை விட்டு அகலாமல் இருக்கும் இந்த நேரத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பாக நடிகர் பாண்டுவும் அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் பாண்டு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். நடிகர் பாண்டு உயிரிழந்த நிலையில் அவரது மனைவி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். உயிரிழந்த நடிகர் பாண்டுவின் வயது 76. தமிழில் மாணவன் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகர் பாண்டு தொடர்ந்து தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஏழையின் சிரிப்பில் சின்னத்தம்பி உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.வெறும் நகைச்சுவை வேடத்தில் மட்டுமல்லாது நிறைய குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் பாண்டு.

சினிமாவை தவிர கேப்பிடல் லெட்டர்ஸ் என்று நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார் .அந்த நிறுவனத்தின் மூலமாக பல பிரபலங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இரட்டை இலை சின்னம் இவர் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்துவரும் குர்ஆனோ வைரஸ் இன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் இறப்பு சதவிகிதமும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Actor and Artiste Pandu passed away in Chennai, today battling COVID19 infection. He was the person who MGR choose to design the Flag and Logo of AIADMK. #1ShotNews | #Pandu | #RIPPandu | #COVID19 | #Coronavirus | #WearMask | #StaySafe pic.twitter.com/15mX6Y0eWr

— NadigarSangam PrNews (@NadigarsangamP) May 6, 2021