மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், மாணவியை வீட்டிற்கு அழைத்து தொடர்ந்து தொந்தரவு கொடுத்த கல்லூரி பேராசியரிர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்ரகாண்ட் மாநிலம் பாட்னாவில் செயல்ட்பட்டு வரும் ஜிபிபங்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், அந்த கல்லூரியின் விடுதியிலும் வார்டனாகவும் பணியாற்றி வந்துள்ளா்.

கல்லூரி விடுதிக்குள்ளேயே, அந்த பேராசியரிர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், பேராசியரியரின் மனைவி ஊருக்கு சென்ற நிலையில், தன்னிடம் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருக்கு, அந்த பேராசியர் “மனைவி வீட்டில் இல்லை.. நீ வந்து சமைச்சு கொடு, என்னுடன் பேசு. சந்தோசமாக இருக்கலாம் வா” என்று தொடர்ந்து எஸ்.எம்.எஸ். மூலம் தொந்தரவு செய்துள்ளார்.

இது எதற்கும் மாணவி பதில் அளிக்காமல் தவிர்த்து வந்த நிலையில், தினமும் இரவு நேரத்தில் போன் பண்ணி, நேரடியாகவே உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. இதனால், மன உலச்சலுக்கு ஆளான மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் சென்று புகார் அளித்துள்ளா். மேலும், அது தொடர்பான ஆதாரங்களையும் ஒப்படைத்தார்.

இதனையடுத்து, அந்த பேராசியரை அழைத்து எச்சரித்த கல்லலூரி நிர்வாகம், பேராசியரிரை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரம், அங்குள்ள ஊடகங்களில் வெளியான நிலையில், உத்ரகாண்ட் மாநிலத்தில் பயிலும் மாணவி மாணவிகளின் பாதுகாப்பை அனைத்து கல்வி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.