பூங்காவில் வெறிபிடித்தார் போல் இளம் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல், மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், வேலை விசயமாக ரவி என்பவரிடம் தொலைப்பேசியில் வேலை விசயமாகப் பேசி உள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு இரவு நேரத்தில் வரச்சொல்லியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, இரவு நேரத்தில் ரவியைச் சந்திக்க அந்த இளம் பெண் பூங்காவிற்கு வந்துள்ளார். அப்போது, பேசிக்கொண்டிருந்த ரவி, திடீரென்று அந்த பெண்ணை அங்குள்ள புதருக்குள் தள்ளிக் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால், அந்த பெண் சத்தமிட்டு கூச்சல் போடவே, 5 பேர் வந்து ரவியை அடித்துத் துரத்தி உள்ளனர். இதனால், ரவி அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர், அந்த 5 பேர் சேர்ந்து, அந்த பெண்ணை வெறிபிடித்தார் போல், மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அந்த இளம்பெண்ணுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ரவியைக் கைது செய்தனர். மேலும், ரவி கொடுத்த தகவலை அடுத்து, கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகி உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர்கள் 5 பேரும், பூங்காவின் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் என்பதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, இளம் பெண் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.