அக்கா - தங்கையை ஆபாசப்படுத்தி படம் வெளியிட்ட 12 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அசோம்நகர் பகுதியைச் சேர்ந்த அக்கா - தங்கைகளான சகோதரிகள் இருவர், அப்பகுதியில் நடைபெற்ற அவர்களது உறவினரின் திருமணத்திற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த திருமணத்தில் கலந்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்துள்ளான். சகோதரிகள் இருவரும் சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து சென்று, அவர்களை அவர்களுக்கேத் தெரியாமல் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துள்ளான்.

பின்னர், வீட்டுக்கு வந்ததும் அக்கா - தங்கைகளின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங்க செய்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளான். இந்த ஆபாச படம், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

ஒரு கட்டத்தில், இந்த ஆபாசப்படம் அக்கா - தங்கைகளான இவர்களுக்கே வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சகோதரிகள் இருவரும், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், தங்களது புகைப்படங்களை யாரோ, ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர்கள், அதனைத் தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தான், சகோதரிகளின் படத்தை ஆபாசமாக மார்பிங்க செய்து வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த மாணவனைக் கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில், சகோதரிகளைப் பார்த்தவுடன், தனக்கு அப்படித் தோன்றியதாகவும், அதனால் போலியான இணையதள கணக்குத் தொடங்கிப் படத்தை வெளியிட்டதாகவும் மாணவன் ஒப்புக்கொண்டான்.

இதனையடுத்து, அந்த படங்கள் இணையதளத்திலிருந்து போலீசார் தற்போது நீக்கி உள்ளனர். இதனிடையே, பள்ளி மாணவனே, பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக வெளியிட்டது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.