அரசியல்வாதி ஒருவர் 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ராஜ், டி.வி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

அத்துடன், தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணியின் துணை அமைப்பாளராகவும் அவர் இருந்து வந்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை சில ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமிக்குச் சாப்பிட ஏதோ தின்பண்டம் கொடுத்துள்ளார். இதில், “அமைதிப்படை” சினிமா பாணியில் மயக்க மருந்தும் கலந்துகொடுத்துள்ளார்.

அதை உட்கொண்ட சிறுமி சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். இதனையடுத்து, அரசியல்வாதி ராஜ், சிறுமியை ஆசை தீர அனுபவித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதேபோல், சிறுமியை பார்க்கும்போதெல்லாம் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த தின்பண்டம் கொடுத்து, அவரை தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதைப்பற்றி எதுவும் தெரியாத மாணவி, வழக்கம் போல், பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இதனையடுத்து, அவர் கருவுற்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், வெளியே தெரிந்தால் அசிங்கம் என்பதால், சிறுமியின் எதிர்காலம் கருதி, கர்ப்பம் கலைவதற்கான மருந்தை அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். இதில், 6 மாதமான குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

பின்னர், குழந்தையை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். இது பற்றி போலீசாருக்கு ரகசியமாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சிறுமியை திமுக பிரமுகர் பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால், சிறுமி கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது. மேலும், இது குறித்து வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்று அவர் மிரட்டியும் தெரியவந்தது.

இதனையடுத்து, திமுக பிரமுகர் ராஜ், புதுக்கோட்டையில் பதுங்கியிருந்ததை அறிந்த புதுக்கோட்டை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, 'அமைதிப்படை' பாணியில் 16 வயது சிறுமி அரசியல்வாதியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.