7 ஆண்டுகளுக்கு முன்பு பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் தற்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நெல்லை லாலுகாபுருத்தைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிசத்திற்கு வந்துள்ளது.

அதன்படி, கடந்த 2012 ஆம் ஆண்டு சேரன் மகாதேவியைச் சேர்ந்த சிவக்குமார், மணிகண்டன், ஆசீர்செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களாக இருந்துள்ளனர்.

அப்போது, திருமணம் ஆன சிவகுமார், அந்த பகுதியில் உள்ள விவகாரத்து ஆன இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, பலாத்காரம் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில், அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண் மயங்கிய நிலையில், தனது நண்பர்களான மணிகண்டன், ஆசீர்செல்வத்திற்கும் அந்த பெண்ணை விருந்தாக்கி உள்ளார்.

கண் வழித்ததும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி சிவகுமாரை வற்புறுத்தி உள்ளார். இதனால், நெல்லையில் வீடு ஒன்றை வாடைக்கு எடுத்து, அந்த பெண்ணுடன் சில நாட்கள் தங்கி உள்ளார். அப்போது, இருவருக்குள்ளும் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சிவகுமார் தனது நண்பர்களான மணிகண்டன், ஆசீர்செல்வத்தை வரவைத்து, அந்த பெண்ணை 3 பேரும் சேர்ந்து ருசிக்க ருசிக்கக் கூட்டுப் பலாத்காரம் செய்து, கொன்று புதைத்துள்ளனர்.

இதனையடுத்து, சிவக்குமார் ஊரைவிட்டு மும்மைக்குச் சென்று, அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருவதாக இருவரும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், மும்பைக்குச் சென்று அவரை கைது செய்து நெல்லைக்குக் கொண்டுவந்துள்ளனர். தற்போது, 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 7 ஆண்டுகளுக்கு முன்பு பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று புதைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.