“வாயில் மது ஊற்றி.. கதறக் கதற பலாத்காரம் செய்தோம்” என்று ஐதராபாத் பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் அதிர வைக்கும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாட்டையே உலுக்கும் வகையில் 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் மருத்துவர், கடத்தப்பட்டுக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு.. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதனையடுத்து, அந்த மகா பாதக செயலை செய்த 4 பேரை, சிசிடிவி காட்சியின் உதவியுடன் ஒரே நாளில் போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், நெஞ்சையே பதற வைக்கக்கூடிய உச்சபட்சமான கொடூரமான செயல்களை அவர்கள் 4 பேரும் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, “இரவு 9.15 மணிக்குப் பணி முடித்துவிட்டு, வீடு திரும்புவதற்காகத் தனது இருசக்கர வாகனத்தைப் பிரியங்கா ரெட்டி எடுக்க வந்துள்ளார். அப்போது, அவரது வாகனம் பஞ்சர் ஆனதால், அவருக்கு வலுக்கட்டாயமாக உதவுவதுபோல், இருவர் முன்வந்தோம். இதில், சந்தேகமடைந்த அந்த பெண், தனது குடும்பத்தினருக்கு போன் செய்து, தங்களைப் பற்றி புகார் சொன்னதால், அவரை அங்கிருந்து அருகில் உள்ள புதருக்குள், வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றோம். அங்குச் சென்றதும், அவரை செல்போனை பிடுங்கி சுட்ச் ஆப் செய்துவிட்டு, அதைத் தூக்கி எரிந்துவிட்டோம்.

அப்போது, அவர் சத்தம் போட்டுக் கத்தியதால், நாங்கள் வாங்கி வைத்திருந்த மதுவை அவர் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினோம். சிறிது நேரத்தில் புலம்பியபடியே, அவர் மயக்கமானார். அப்போது, நாங்கள் 4 பேரும் சேர்ந்த அவரை மாறி மாறி பலாத்காரம் செய்தோம். அந்த மயக்கத்திலும் கூட, வலியால் அவர் புலம்பியபடியே, என்னை விட்டுவிடும்படி கூறினாள்.

இதனையடுத்து, இவளை இப்படியே வெளியே விட்டால், எங்களுக்கு ஆபத்து என்று நாங்கள் கருதியதால், நாங்கள் எங்களுக்குள் பேசி முடிவெடுத்துவிட்டு, அந்த பெண்ணை அங்கிருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு, எங்கள் லாரியிலேயே தூக்கிச் சென்று, குறிப்பிட்ட அந்த பாலத்துக்கு அடியில் வைத்து, தீ வைத்து எரித்துவிட்டோம். ஆனாலும், நாங்கள் போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம்” என்று கைதான 4 பேரும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகளின் வாக்குமூலம், அனைத்து தரப்பினரையும் அதிர வைத்துள்ளது. அத்துடன், பெண்கள் சங்கங்கள் எல்லாம் கொதித்துப்போய், போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.