சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற வங்கி அதிகாரியை ஊர் மக்கள் நிர்வாணமாக்கி சாலையில் இழுத்துச் சென்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பார்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஜவஹர் வைத்யா, அங்குள்ள கூட்டுறவு வங்கியில் collection agent ஆக பணியாற்றுகிறார்.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள சில வீடுகளில் ஜவஹர் வைத்யா அவ்வப்போது, பணம் வசூல் செய்வது வழக்கம். அப்படி இன்று அவர் குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு பணம் வசூல் செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் 4 வயது சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தஜவஹர் வைத்யா, அந்த 4 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த சிறுமியின் தாயார், ஜவஹர் வைத்யாவை கடுமையாகத் தாக்கி கூச்சலிடவே, கிராம மக்களே, அவரை சூழ்ந்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அவரது ஆடைகளை அவிழ்த்து, தெருக்களில் அவரை இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

இதனிடையே, 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை, கிராம மக்களே நிர்வாணமாக்கி சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.