பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காமுகர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 6 வயது சிறுமி, பள்ளிக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, மேட்டூர் செல்லும் ரயில் பாதை அருகே சிறுமி வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சிலர், சிறுமிக்கு சில சாக்லேட் கொடுத்து, ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.

அப்போது, சிறுமி பயந்த நிலையல் காணப்படவே, அந்த காமூகர்கள், சிறுமியை அங்கிருந்து அருகில் உள்ள புதுர் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் துன்பறுத்தல் செய்துள்ளனர். இதனால், வலியால் சிறுமி கத்தி கூச்சலிடவே, அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

பின்னர், அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி, நடந்ததையெல்லாம் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைக் கடத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காமுகர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, உள்ளூரில், வேலைக்குச் செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சிலர், தினமும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் மது அருந்திவிட்டு, சீட்டு ஆடிக்கொண்டு இருப்பார்கள் என்றும், அவர்கள் தான், இந்த செயலை செய்திருக்கக்கூடும் என்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனையடுத்து, வேலையில்லாமல் வெட்டியாக ஊர் சுற்றித் திரியும் இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல், அப்பகுதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.