ராஜஸ்தானில் மினி பேருந்துகள் மோதி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் பகுதியில் 2 மினி பேருந்துகள் எதிர் எதிர் பகுதியில் வந்துகொண்டிருந்தன. அப்போது, அந்த பகுதியில் உள்ள குறுகலான சாலையில் பேருந்து ஒன்றை ஒன்றைக் கடந்து செல்லும்போது, 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஒரு பேருந்து நிலைகுலைந்து, அருகில் உள்ள மரத்தில் போய் மோதியுள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், ஒரு சிலர், உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அதிகாலை நேரம் என்பதால், ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்திலிருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.