யாரும் எதிர்பார்க்காத வகையில் நித்தியானந்தா புலம்பித் தவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

நித்தியானந்தா சிறுமிகளைக் கடத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் தலைமறைவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியான. இதனையடுத்து, அவர் கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கைப்பற்றியெல்லாம் கவலைப்படாத அவர், வழக்கம்போல் தனது பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இதனிடையே, நித்தியானந்தா கடந்த சில மாதங்களாகத் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதை நிறுத்திவிட்டு, ஆங்கிலத்தில் மட்டுமே சொற்பொழிவு ஆற்றி வந்தார். இது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அவர் புலம்பித் தவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, அந்த கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக,அந்த விடியோ சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவின் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கும் நித்தியானந்தா, அடுத்த சில நிமிடங்களில் தமிழில் இப்படிப் பேசி புலம்புகிறார்.

“தமிழ்ல வாயத்திறந்தாலே ஏதாவது தகராறு பண்றானுங்க. எதையாவது நான் சொல்லி வச்சிடுறேன். இவனுங்களுக்கு தமிழும் புரிய மாட்டேங்குது. புரியலைனா கூட சும்மாவும் இருக்க மாட்டேங்குறானுங்க.

மூல லிங்கத்துக்கும், மூலவர் லிங்கத்துக்கும் வித்தியாசம் தெரிய மாட்டேங்குது. எதையாவது நான் சொல்லி வச்சுறேன். அதுக்கு, அவனுங்க எதையாவது கேஸை பைல் பண்ணி வச்சிறானுங்க.

இதுக்கு பெயில் வாங்கிட்டு இருக்குறதுக்கே டைம் சரியா இருக்கு. அதனால தான்யா, தமிழ்ல சத் சங்கம் செய்யாம சும்மா இருக்கேன். சீக்கிரம் வந்துறேன்.

நித்யானந்தாவுக்கு வந்த சோதனை இப்படி புலம்ப வச்சுட்டானுகளே பாவத்த 😂😂😂

இருங்கையா வந்துடுரேன்😂😂😂 pic.twitter.com/oMgDxRoKNU

— சுபாஜி 😎 (@Subaji_twits) November 25, 2019

இன்னொன்னு, தமிழ்நாட்டுல எவனுக்காவது எந்த பிரச்னையா இருந்தாலும் சரி, கவனத்தை திருப்புறதுக்கு நித்தியானந்தா ஒருத்தனைத் தான் தேடுறானுங்க” என அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ பார்த்த யாரும் சிரிக்காமலெல்லாம் இருக்க முடியாது. மேலும், இந்த வீடியோவை பார்த்ததும், இவருக்கா இந்த நிலைமை என்று நம்மையே இச்சுக்கொட்ட வைக்கிறது.