முதலாளியைக் கடிக்க வந்த பாம்பை, விசுவாசமான நாய் ஒன்று கடித்துக்கொன்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பட்டுக்கோட்டை அடுத்த முத்துப்பேட்டை பங்களா தெருவைச் சேர்ந்த சேகர், வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை சேகர் வீட்டின் முன்பு வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று, சேகர் அருகில் சென்று அவரை கடிக்க முற்பட்டது.

அப்போது, வீட்டில் எங்கிருந்தோ ஓடி வந்த நாய், பாம்பிடம் போராடி, அதனை கடித்துக் கொன்றது. இதில், அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் உயிரிழந்தது. இதனையடுத்து, பாம்பிடம் கொத்து வாங்கிய நாயும், அங்கேயே மயங்கியது.

இதனால், பதறிப்போன சேகர், அரசு கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மகேந்திரன், 2 ஊசி போட்டு சிகிச்சை அளித்து நாயைக் காப்பாற்றினார்.