மும்பையிலிருந்து வந்த 15 வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நெஞ்சை உளுக்கு உள்ளது.

சிவகாசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள ஊத்துமலை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நீண்ட வருடங்களாக மும்பையிலேயே வசித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் குடியேறி உள்ளனர். அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த15 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள மலைக் கோயிலுக்குத் தனியாகச் சென்றுள்ளார். அப்போது, மாரிசெல்வம், முத்துவேல், முருகன், கருப்பசாமி ஆகிய 4 பேரும், அந்த பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.

4 இளைஞர்களும், சிறுமி தனியாக வருவதைப் பார்த்ததும், அங்குள்ள காட்டுப்பகுதிக்குத் தூக்கிச் சென்று, அடித்துத் துன்புறுத்தி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமி, எவ்வளவோ அழுது கெஞ்சியும், அந்த போதை இளைஞர்களுக்கு இறக்கம் வரவில்லை. இதனையடுத்து, அந்த சிறுமியை 4 பேரும், போதை தெளியும் வரை கசிக்கிப் பிழிந்துவிட்டு, ஊருக்கு அருகில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து, இறக்கி விட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமி மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தனக்கு நேர்ந்த துயரங்களைச் சொல்லி அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான முருகனை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் பாசத்தில், மும்பையிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய குடும்பம், இந்த அசம்பாவிதத்தால் மீண்டும் மும்பைக்குச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.