வகுப்பு தோழியுடன் உல்லாசம் இருந்த கணவனை, மனைவி எதிர்த்து கேள்வி கேட்டதால், கள்ளக் காதல் ஜோடி இருவரம் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார், தனது மனைவி வித்யாவுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், தன்னுடைய பள்ளித் தோழியான சுனிதா பேபியை, சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு பள்ளி ரீயூனியன் நிகழ்வில் சந்தித்து பரஸ்பரமாக நட்பு பாராட்டி உள்ளனர்.

அப்போது, இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட அவர்கள், சில நாட்களில் தங்களது உடம்பையும் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். இருவருக்குள்ளும் தகாத உறவு உருவானது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

கள்ளக் காதல் மோகம் முற்றவே, மும்பையில் தனது கணவர் மற்றும் தன்னுடைய 3 குழந்தைகளை விட்டுப் பிரிந்து, கேரளாவிற்கே சுனிதா பேபி செவிலியர் பணி மாறுதல் வாங்கி வந்துள்ளார்.

கேரளாவிற்கு சுனிதா பேபி வந்ததும், பிரேம்குமார் தன்னுடைய மனைவியிடம் சென்று துணிச்சலுடன், தான் சுனிதா பேபியுடன் வாழப்போவதாகத் தைரியமாகக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரால், ஒன்றும் சொல்ல முடியவில்லை.

மனைவி அமைதியானதால், சுனிதா பேபியுடன், பிரேம்குமார் ஒன்றாகச் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஒருகட்டத்தில், எரிச்சலடைந்த பிரேம்குமாரின் மனைவி வித்யா, கணவரிடம் சண்டைபோடத் தொடங்கி உள்ளார்.

இதனால், மனைவி தீர்த்துக்கட்ட முடிவு செய்த பிரேம்குமார், கள்ளக் காதலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இருவரும் வித்யாவிற்கு போன் செய்து, தனியாக ஒரு இடத்திற்கு வரச்சொல்லி உள்ளனர்.

அதன்படி குறிப்பிட்ட இடத்திற்கு வித்யா வரவே, இருவரும் சேர்ந்து, வித்யாவிற்கு வாயில் மதுவை மல்லுக்கட்டி ஊற்றி உள்ளனர். இதில், வித்யா மயங்கவே, அவரை கழுத்தை நெறித்து, இருவரும் கொலை செய்துள்ளனர்.

பின்னர், வித்தியாவின் உடலைத் திருநெல்வேலி அருகில் உள்ள வள்ளியூரில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் வீசி விட்டுச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, 2 நாட்கள் கழித்து தனது மனைவியைக் காணவில்லை என்று, காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரேம்குமார் மீது சந்தேகப்பட்டனர்.

இதனால், அவரை தனியாக அழைத்து விசாரித்தனர். மேலும், அவர் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, மனைவியைக் கொலை செய்தது தொடர்பாக, தனது கள்ளக் காதலிக்கு அவர் அனுப்பிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அவரையும், அவரது கள்ளக் காதலியையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, தோழியுடன் ஏற்பட்ட கள்ளக் காதலால், மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.