காதலித்து கர்ப்பமாக்கி கலட்டிவிட்ட காதலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் புது கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், மாணவியின் உறவினர் சடையன்குளத்தை சேர்ந்த அசோக், அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் அசோக்கும், 17 வயது கல்லூரி மாணவியும், நெருக்கமாகப் பழகத் தொடங்கினர்.

மாணவியோ, தனது உறவினர் என்ற உரிமையில் காதலிக்க ஆரம்பித்தார். அதேபோல், அசோக்கும் மாணவியிடம் காதல் ஆசை காட்டியும், ஆசை வார்த்தைகள் கூறியும் மாணவியைக் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இன்புற்று இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், தனது ஆசைகளை மாணவியிடம் தீர்த்துக்கொண்ட அசோக், அதன் பிறகு மாணவியைப் பார்க்க அவரது வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டதாகவும், மாணவியிடம் பேசாமல் தவிர்த்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், தினமும் வழக்கம்போல் கல்லூரி சென்று வந்த மாணவி, கடந்த 12ஆம் தேதி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கருவுற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து விசாரித்துள்ளனர். சில நாட்கள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, கருவுற்ற மாணவிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அசோக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, தலைமறைவான அசோக்கை போலீசார் தேடி வருகின்றனர்.