ஆண்மை இல்லாத காரணத்தால், மனைவியை 2 தம்பிகளிடம் உல்லாசத்திற்கு அனுப்பி வைக்கும் கணவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூர் பங்க்ரோடா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

திருமணம் ஆன முதல் இரவு அன்று தான், கணவருக்கு ஆண்மை இல்லை என்று மனைவிக்குத் தெரியவந்தது. இதனையடுத்து, கணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் அவருக்கு ஆண்மை திரும்பும் என்றும், அவரது குடும்பத்தார் அந்த பெண்ணை நம்ப வைத்துள்ளனர்.

ஆனால், பல ஆண்டுகள் கடந்தும், அவருக்கு ஆண்மை திரும்பவில்லை. இதனால், மனைவியை வெளியே விட்டால், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுவார் என்பதால், அவரை வீட்டிலேயே சிறை வைத்து அடைத்து வைத்துள்ளனர்.

மேலும், குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்பதற்காக, தனது 2 தம்பிகளுடன் மனைவியைக் கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவிக்கச் செய்துள்ளார். இதில், அந்த பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, 2 தம்பிகளும் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும், அவரை வெளியே விட்டால், குடும்ப மானம் போய் விடும் என்பதால், வீட்டுலேயே அடைத்து வைத்து, பல்வேறு தொல்லைகளைத் தந்துள்ளனர்.

தம்பிகளின் பாலியல் தொல்லை குறித்து கணவரிடம் புகார் அளித்தும், கணவர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொல்ல வில்லை என்று தெரிகிறது. இதனால், ஒரு முடிவுக்கு வந்த அந்த பெண், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன், எப்படியோ அந்த வீட்டிலிருந்து தப்பித்து, ஜெய்ப்பூர் பங்க்ரோடா காவல் நிலையத்தில் கணவர் மீதும், கணவரின் 2 தம்பிகள் மீதும் பாலியல் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொள்வதாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், போலீசார் யாரையும் கைது செய்யாமல், மெத்தனமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், அப்பகுதியில் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.