ஓடும் ரயிலில் காதலர்கள் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

டெல்லி மெட்ரோ ரயிலில் இன்று காலை வழக்கத்தை விடக் கூட்டம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. அப்போது, ஒரு இளம் காதல் ஜோடி ரயிலில் உள்ள இருக்கையில் சக பயணிகளுடன் அமர்ந்துள்ளனர்.

அந்த காதல் ஜோடிகளில் காதலன் அருகில் ஒரு ஆணும், அந்த காதலி அருகில் மற்றொரு ஆணும் ஒருவரை ஒருவர் உரசியபடியே அமர்ந்திருக்கின்றனர். அப்போது, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த இளம் காதல் ஜோடிகள், திடீரென்று வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்துக்கொண்டனர்.

இந்த முத்தக்காட்சியைப் பார்த்த குறும்புக்கார இளைஞர் ஒருவர், தனது செல்போனில் படமாக்கி உள்ளார். இதனையடுத்து, அந்த காதலர்களின் முத்தக் காட்சியைத் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், மெட்ரோரயில்வே நிர்வாகத்தினருக்கும், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும், டெல்லி போலீசாருக்கும் இந்த முத்தக் காட்சியை டேக் செய்து வருகின்றனர்.

.@ArvindKejriwal ने दिल्ली को लंदन बनाया की नहीं इसका तो नहीं पता पर दिल्ली के छिछोरों ने दिल्ली मेट्रो को ज़रूर लंदन बनाने की कोशिश की है ..@OfficialDMRC is this allowed in delhi metro ? @DelhiPolice @DCP_DelhiMetro

Note: Video rcvd. on WA pic.twitter.com/Xi25BtAVC4

— Rohit Sharma (@RohitkrSh) November 4, 2019

மேலும், இந்த வீடியோவின் கீழே, இது புதுவகையான யோகா என்று ஒரு குறும்புக்கார இளைஞர் கமெண்ட் செய்துள்ளார். இதனால், இந்த முத்தக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலர்கள் முத்தம் கொடுத்துக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட விசயமாக இருந்தாலும், பொது இடங்களில் எல்லை மீறி நடந்துகொள்வது, அநாகரிகமான செயல் என்று பெரும்பாலான தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த முத்தக் காட்சி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.