டெல்லி தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் இறந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் பிரசித்து பெற்ற ஜான்சிராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்குப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் பயங்கரமான தீ காயங்களுடன் மீட்கப்பட்டு, அங்குள்ள 3 அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அத்துடன் தீயை அணைக்கும் முயற்சியில், சுமார்40க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும்ஈடுபடுத்தப்பட்டன.

குறிப்பாக, இந்த தீ விபத்தின் போது, தன் உயிரைத் துச்சமென நினைத்து, தீ விபத்தில் மயங்கிக்கிடந்த 11 பேரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹானை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த கட்டட தொழிற்சாலையில் அனுமதியில்லாமல் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதேபோல், மாநில அரசு சார்பில் தீ விபத்தில்உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு 1 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.