மகளின் தோழியுடன் 5 ஆண்டுகளாக முறையற்ற உறவு வைத்திருந்தவரை, அதே பெண் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த கற்பூர வியாபாரி 54 வயதான அம்மன் சேகர் தான், முறையற்ற உறவால் கொலை செய்யப்பட்டவர்.

அம்மன் சேகரின் மகள் கல்லூரியில் படிக்கும்போது, அவருடன் திருவொற்றியூரைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண்ணும் ஒன்றாகப் படித்து வந்தனர். இப்போது, இருவரும் தோழிகளாக மாறினார்கள்.

இதனால், பவித்ரா அடிக்கடி தன் தோழியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது, தோழியின் அப்பா அம்மன் சேகர் அறிமுகமாகி உள்ளார்.

இதனையடுத்து, இருவருக்குள்ளும் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது. இதில், அவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினர். அந்த உல்லாச வாழ்க்கை அந்த பெண்ணுக்கு பிடித்துப்போனதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இதனிடையே, பவித்ரா கல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் ஆன நிலையில், அவருக்கு வீட்டில் வரன் பார்த்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அம்மன் சேகர், பவித்ராவின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். மேலும், “என்னை மீறி திருமணம் செய்தால், உனக்குத் தெரியாமல் உன்னை ஆபாசமாக எடுத்த வீடியோவை வெளியிடுவேன்” என்று மிரட்டி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பவித்ரா, திட்டம்போட்டார். அப்போது, அம்மன் சேகருக்குப் பிறந்தநாள் வந்தது. அன்று மாலை அவரை அடையாற்றுக்கு வருமாறு பவித்ரா அழைத்துள்ளார். அதன்படி, இருவரும் அடையாறு சென்றுவிட்டு, இரவு 9 மணி அளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அருகே வந்து நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த பெண் ஏற்கனவே திட்டமிட்டபடி, “உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ். கண்ணை மூடுங்கள் தருகிறேன்” என்று கூற, அதற்கு அவரும் சிரித்த முகத்துடனே கண்ணை மூடியுள்ளார்.

அந்த கன நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த ஃபெவிகுவிக் பசையை சேகரின் முகத்தில் தடவி உள்ளார். இதில், அவரது வாயிலும் பசை ஒட்டிக்கொண்டதால், அவரால், வாயைத் திறக்க முடியவில்லை.

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில், அம்மன் சேகரன் கழுத்தை அழுத்து, கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

பின்னர், அந்த பகுதியில் சிசிடிவியால், பவித்ரா போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.

இதனிடையே, மகளின் தோழியுடன் 5 ஆண்டுகளாக முறையற்ற உறவு வைத்திருந்தவரை, அதே பெண் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.