டியூசன் சென்டரில் படுக்கை அறை அமைத்து, மாணவ மாணவிகளை மிரட்டி ஒன்றாகப் படுக்க வைத்து வீடியோ எடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் டியூசன் சென்டரில், 6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள், ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஆடைகள் கலைந்த நிலையில், மிகவும் சோர்வுடன் நேற்று இரவு டியூசன் சென்டரிலிருந்து வீடு திரும்பி உள்ளார். இதனைப்பார்த்த, மாணவியின் பெற்றோர்கள், மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, “டியூசன் டீச்சர் சஞ்சனாவும் அவரது ஆண் நண்பர் 38 வயதான பாலாஜியும் சேர்ந்து, என்னை மிரட்டி, கூட படிக்கும் மாணவன் ஒருவனுடன் ஆடைகள் கலைக்கப்பட்ட நிலையில் ஒன்றாகப் படுக்க வைத்து, அதை வீடியோவாக எடுத்துள்ளதாகவும்” கூறியுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், டியூசன் டீச்சர் சஞ்சனாவையும், அவரது ஆண் நண்பர் பாலாஜியையும் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களது செல்போனை வாங்கி பார்த்ததில், 10 மாணவிகளின் ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களும் இருப்பது தெரிய வந்தது.

அந்த 10 மாணவிகளையும், டியூசன் சென்டரில் உள்ள படுக்கை அறையில் ஆடைகளைக் கலைத்து, கூட படிக்கும் மாணவர்களை அந்த மாணவிகளுடன் ஒன்றாக இருக்க வைத்து வீடியோ எடுத்தது தெரியவந்தது. இப்படி வீடியோ எடுத்த பிறகு, அதைக் காட்டி அந்த மாணவிகளை தன்னுடன் உல்லாசமாக இருக்கவும், பணம் பறிப்பதற்கும் பாலாஜி, பயன்படுத்திக்கொள்வதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். இதனிடையே, டியூசன் டீச்சரே சக மாணவ மாணவிகளை ஒன்றாகப் படுக்க வைத்து வீடியோ எடுத்துள்ள சம்பவம், சென்னையில் தங்களது குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பும் சக பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.