கள்ளக் காதலால் ஆத்திரமடைந்த மகன், தாயாரின் காதலனை வெட்டிக்கொலை செய்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்த 31 வயதான அன்வர் பாட்ஷா, ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார்.

இவருக்கும், லட்சுமி என்பவருக்கும் தகாத உறவு இருந்தாக தெரிகிறது. இது குறித்து, லட்சுமியின் மகன் அஜித், அன்வர் பாட்ஷாவை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் அதனைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அஜித், அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், சம்பத்தன்று, தனது இரு நண்பர்களுடன் அன்வர் பாட்ஷா பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது, இரவு 11 மணி அளவில், கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் அருகே அன்வர் பாட்ஷா, தனது தயார் மற்றும் லட்சுமி உடன் தன்னுடைய ஆட்டோவில் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த இரவு நேரத்தில், அன்வர் பாட்ஷாவுடன் தனது தாயாரைப் பார்த்ததால் ஆத்திரமடைந்த அஜித், தன் சக நண்பர்களுடன் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், அஜித் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அஜித்தின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.