2081 கோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ள நிலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 21 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் chepauk cricket stadium, chepauk cricket stadium lease extended sale, chepauk cricket stadium lease extended, நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சுமார் 17 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தைத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், சென்னை கிரிக்கெட் மன்றமும் குத்தகைக்கு எடுத்துத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.

கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, இந்த நிலங்களுக்குச் சந்தை மதிப்பின் இரு மடங்கில் 7 சதவீதத்தைக் குத்தகை தொகையாக வசூலிக்க வேண்டும் என்பது விதி.

அதேபோல், இந்த இடத்திற்கான குத்தகை ஒப்பந்தம் 1995 ஆம் ஆண்டில், 20 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே, குத்தகையை நீட்டிக்கும் வகையில் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. மீதமுள்ள 15 ஆண்டுகளுக்குக் குத்தகைத் தொகை நிர்ணயிப்பதில் அப்போது குழப்பம் ஏற்பட்டது.

இதனால் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வசூலித்திருக்க வேண்டிய 2,081 கோடி ரூபாய் குத்தகை தொகை, அரசுக்கு வராமல் அப்படியே நிலுவையில் உள்ளது.

இதனிடையே, நிலுவையில் உள்ள குத்தகை பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணம் விதமாக நிதி, வருவாய், வணிக வரி, பத்திரப்பதிவு அலுவலர்கள் அடங்கிய மூன்று நபர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது.

ஒரு பக்கம் 2081 கோடி ரூபாய் வாடகை பாக்கி இருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் புதிய ஒப்பந்தம் தற்போது ஏற்பட்டது. அதன்படி தற்போது, புதிதாக 21 வருடங்களுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கான குத்தகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 21 ஆண்டுகளுக்குப் புதிதாக ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பழைய பாக்கி தொகை குறித்து தமிழக அரசு வெளிப்படையாக எதுவும் இதுவரை அறிவிக்கவில்லை.

இதனிடையே, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மீண்டும் 21 ஆண்டுகளுக்குக் குத்தகை நீட்டிக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ அரசுக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தை இது காட்டும் விதமாக அமைந்துள்ளதாகவும் ரூபா குருநாத் புகழாரம் சூட்டி உள்ளார்.