சிந்து சமவெளி, வில் அம்பு உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Big Boss Star Daniel Annie Pope Joins The Crew Of Harish Kalyans Dhanusu Raasi Neyargalae

இந்நிலையில் சஞ்சய் பாரதி இயக்கும் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மற்ற ராசிகளை ஒப்பிடுகையில் தனுசு ராசி அதிக கவனத்தை ஈர்ப்பதால் தான் இந்த பெயர் வைத்தார்களாம்.

Big Boss Star Daniel Annie Pope Joins The Crew Of Harish Kalyans Dhanusu Raasi Neyargalae

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால் இந்த படத்தில் டேனியல் ஆனி போப் நடித்துள்ளாராம். படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துவிட்டதென தகவல் வெளியானது.