தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.தற்போது இவர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.இதனை தொடர்ந்து ஜாக்பாட் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

Suriya Jyothika Ponmagal Vandhal Pooja Video

இதை தவிர கார்த்தி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.மேலும் புதுமுக இயக்குனர் Fredrick இயக்கும் புதிய படத்திலும் ஜோதிகா நடிக்கிறார்.இந்த படத்தையும் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது.

Suriya Jyothika Ponmagal Vandhal Pooja Video

இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா,பாக்யராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.தற்போது இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு பொன்மகள் வந்தாள் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Suriya Jyothika Ponmagal Vandhal Pooja Video

இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடியோவில் சூர்யா ஜோதிகா இருவரும் மாறி மாறி மாலை அணிந்துகொள்ளும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.