லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகிறது 2.0. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடிக்கின்றனர். 

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஆன்டனி எடிட்டிங் செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார்.

அழகான ஏமி ஜாக்சன் ஒருபுறம் தோன்ற மறுபுறம் அக்ஷய் குமார் ஆக்ரோஷமாக நடித்து ட்ரைலரில் தெறிக்கவிட்டிருக்கிறார். ரோபோட்டிக் பாணியில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி எழுதியுள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா இந்த இரு 3டி GIF-ஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.   

Lyca Productions 2Point0 Movie New Video Released Indicating Thalaivars Version

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அவதாரங்களை குறிப்பிடும் வகையில் இந்த வீடியோ காட்சிகள் அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.