ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் SK 13. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சதீஷ், ராதிகா, தம்பி ராமைய்யா ஆகியோர் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நவம்பர் இரண்டாம் வாரம் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக அசர்பைஜான் சென்றிருக்கின்றனர் படக்குழுவினர்.

இதைதொடர்ந்து அங்குள்ள ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சிறந்த நடிகையான நயன்தாராவிற்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கு எடுத்துகாட்டாய் திகழ்கிறது இந்நிகழ்வு. குழந்தையை கொஞ்சுவது போல் உள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.