தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது.இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார்.

யோகி பாபு,தம்பி ராமையா ,ரோபோ ஷங்கர்,விவேக் ,அனிகா,ஜெகபதி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.இமான் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார்.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள குடும்ப பாடலான டங்கா டங்கா என்ற பாடல் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பாடுவது போல அமைந்துள்ள பாடல் தற்போது யூடூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.கீழே உள்ள லிங்கில் அந்த பாடலை காணலாம்