நெருப்பு டா பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் அருண்ராஜா காமராஜ். திரை துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்தவர் தற்போது இயக்குனராக களமிறங்கிய படம் கனா.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் கனா, மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

தற்போது இப்படத்தின் Sneak Peek வெளியாகியது. வரும் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.