விஸ்வாசம் தளத்தில் ஒளிப்பதிவாளராக திகழ்ந்த தல அஜித் !
By Sakthi Priyan | Galatta | January 17, 2019 10:15 AM IST
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் விஸ்வாசம்.
இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.
தல அஜித் கார் மற்றும் பைக் ஓட்டுவதில் ஜித்தன் என்பது நாம் அறிந்தவையே, அதே போல் கேமரா பிரியரும் கூட. விஸ்வாசம் படத்தில் வரும் டாப் அங்கிள் காட்சிகளை ஹெலிகேம் உபயோகப்படுத்தி, தனது அற்புதமான பங்காற்றலை அளித்தார் ஒளிப்பதிவாளர் வெற்றி. அவருடன் சேர்ந்து தல அஜித் ஹெலிகேம் உபயோகிப்பது போன்ற பிரத்தியேக புகைப்படம் இணையத்தில் வெளியாகிறது.
சமீபத்தில் Aero modelling-ல் கல்லூரி மாணவர்களுடன் ஈடுபட்டு வந்த அஜித், இதனால் அவரது ஹெலிகேம் கையாளும் முறை பற்றி அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ட்ரைலரில் வரும் டாப்-வியூ (ஏரியல் வியூ) காட்சிகள் கூட தல அஜித் எடுத்ததா ? என்ற கேள்வியில் உள்ளனர் தல ரசிகர்கள்.