சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.  

ஆனால் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் வெளியாகவுள்ள இந்நிலையில் அஜித் ரசிகர்கள் விஸ்வாஸம் படம் எந்த நாளில் வந்தால் சிறப்பாக இருக்கும் என வெற்றி தியேட்டர் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்கள். 

அதற்கு அவர் ஜனவரி 11 ல் வந்தால் 16 ம் தேதி வரை கூட்டம் இருக்கும். பின் 17, 18 ம் தேதி வேலை நாட்கள் என்பதால் சிட்டி தவிர்த்து மற்ற பகுதிகளில் கூட்டம் சற்று குறைந்து, மறுபடியும் வார இறுதியில் ஹவுஸ் புல் தான். ஜனவரி 11 முதல் 20 வரை கோல்டன் பாக்ஸ் ஆஃபிஸ் தான் என கூறியுள்ளார்.