விஷால் படத்தில் சன்னிலியோனா ?
By Sakthi Priyan | Galatta | November 16, 2018 16:35 PM IST
புரட்சி தளபதி விஷாலின் அயோக்கியா படத்துக்கும் நடிகை சன்னிலியோனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக நெருங்கிய சினிமா வட்டாரங்களின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தில் ஒரு பாடலுக்கு அவர் கவர்ச்சி நடனம் ஆடவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார்.
சன்னிலியோன் தமிழ், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் வீரமாதேவி சரித்திர படத்தில் சன்னிலியோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் நடக்கின்றன. மதுரை கோர்ட்டிலும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிக்க தடை விதிக்க வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சன்னிலியோன் நடிக்க கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் வீரமாதேவி படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடக்கிறது. வடிவுடையான் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பது நலம்.