மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியவிருக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

முதியவர் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இப்படம் 25-வது படமாகும். இப்படத்தில் மக்கள் செல்வனுடன் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தை பார்த்துவிட்டு இரும்புத்திரை புகழ் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் ட்விட்டரில், நடிப்புக்கலைக்கான பங்களிப்பு என்றும், இயக்குனர் பாலாஜி தரணீதரன் அவுட்ஸ்டாண்டிங் படத்தை தந்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகச்சிறப்பாய் அமைந்ததென பதிவிட்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் SK 15 படத்தையும் பி.எஸ்.மித்ரன் தான் இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல்.