விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் குறித்த முக்கிய அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | February 20, 2019 14:47 PM IST
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார்.
சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.வேலைக்காரன் படத்தில் நடித்த மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ரம்யா கிருஷ்ணன்,காயத்ரி,மிருணாளினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தை YNOTX நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.அதில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் எங்களது முதல் படமாக அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் , இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் இந்த படத்தை பற்றிய அப்டேட் வந்துள்ளதால் விஜய்சேதுபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.