கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக இருந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.வருடத்திற்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டும் இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன அதில் மாமனிதன்,சிந்துபாத்,துக்ளக் சூப்பர் டீலக்ஸ் போன்ற முக்கிய படங்களும் அடங்கும்.

மணிரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்தில் முதலில் தளபதி விஜய் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன.பின்னர் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்றும் தகவல்கள் வந்தன.

கால்ஷீட் பிரச்சனை காரணமாக தற்போது விஜய்சேதுபதியும் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.இதையடுத்து விஜய்சேதுபதிக்கு பதிலாக இந்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார் என்ற பிரத்யேக தகவலும் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Replaced in Mani Ratnam Directorial Ponniyin Selvan CoStarring Jayam Ravi STR Vikram

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி,STR,அமிதாப் பச்சன்,ஐஷ்வர்யா ராய் உள்ளிட்டோர் இணைந்து நடிக்க உள்ளனர். 

Vijay Sethupathi Replaced in Mani Ratnam Directorial Ponniyin Selvan CoStarring Jayam Ravi STR Vikram