மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிந்துபாத் படத்தின் ரிலீசுக்கு தயாராகி வருகிறார்.இதனை தவிர மாமனிதன்,சங்கத்தமிழன்,க.பெ.ரணசிங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

Leading Actress Opts Out of Makkal Selvan Vijay Sethupathi Recent Film Details Here

இதனை தொடர்ந்து VSP 33 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ள படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Leading Actress Opts Out of Makkal Selvan Vijay Sethupathi Recent Film Details Here

சந்திரா ஆர்ட்ஸ் பேனர் இந்த படத்தை தயாரிக்கிறது.தடம்,மீகாமன்,தடையற தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பழனியில் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

Leading Actress Opts Out of Makkal Selvan Vijay Sethupathi Recent Film Details Here

இந்த படத்தில் அமலா பால் முதலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து இவர் விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leading Actress Opts Out of Makkal Selvan Vijay Sethupathi Recent Film Details Here

Leading Actress Opts Out of Makkal Selvan Vijay Sethupathi Recent Film Details Here