தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil Singapenne Song Leaked

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Bigil Singapenne Song Leaked

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடலை விஜய் பாடியுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

Thalapathy Vijay Bigil Singapenne Song Leaked

தற்போது யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தின் முக்கிய பாடல் ஒன்று லீக் ஆகியுள்ளது.சிங்கப்பெண்ணே என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் பெண்களை கொண்டாடுவது போல் இந்த பாடல் உள்ளது.இந்த பாடல் எப்படி லீக் ஆனது என்று படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Thalapathy Vijay Bigil Singapenne Song Leaked

ரசிகர்கள் பாடல் லீக் ஆனதால் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.ஒரு பெரிய நடிகரின் படத்தில் இருந்து இத்தகைய பாடல் லீக் ஆகியுள்ளது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதனை உடனடியாக நிறுத்த படக்குழுவினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

Thalapathy Vijay Bigil Singapenne Song Leaked