கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.   

புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.   

Lyca Productions Contirbuted OneCroreOneLakh For Gaja Cyclone Relief Works

இந்நிலையில், லைக்கா நிறுவனம் ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சம் தொகையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். 2.0, வந்தா ராஜாவாதான் வருவேன், இந்தியன் 2 போன்ற படங்களை தயாரிக்கும் பணிகளில் பிஸியாக இருக்கும் நிறுவனம், நிவாரண பணிகளில் ஈடுபட்டு உதவி செய்வது பாராட்டிற்குரியதாகும்.